மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.05.2022) சென்னை, இராணி மேரி கல்லூரியில், நடைபெற்ற மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழாவை தொடங்கி வைத்து, 608 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 25.66 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கே.ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு தொழிலாளர்கள் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் திரு.த.வேலு, துணை மேயர் திரு. மு. மகேஷ்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி பெ.அமுதா, இ.ஆ.ப., தொழிலாளர்கள் நலன் - திறன் மேம்பாட்டுத் துறைச் செயலாளர் திரு. ஆர். கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ம. பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி பா.பிரியங்கா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
