தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் கண்டறியப்பட்ட சிறந்த ஆட்சேர்த்தல் மற்றும் பணியமர்த்தும் நிறுவனங்கள் மூலமாக பணிவாய்ப்பு பெற்ற 5500 நபர்களில் 300 இளைஞர்களுக்கும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக் தீன் தயால் உபாத்யயா கிராமின் கல்யாண் யோஜனா (DDUGKY) திட்டத்தின் மூலம் திறன் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெற்ற 1000 இளைஞர்களுக்கு மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் பணி நியமனஆணைகள் வழங்கினார்கள்.
தமிழ்நாடு மகளி மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் இயற்கைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர் - சந்தையாளர் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி, 21.11.2023 அன்று சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. விவசாயத்தில் ஈடுபடும் பெண் விவசாயிகளை ஒருங்கிணைத்து சுய உதவிக் குழுக்களை அமைத்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது. அந்த மகளிர் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சிகளை வழங்கி, அவர்களை இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ள வைத்து, அவர்கள் விளைவிக்கும் பொருட்களை விற்பானை செய்திட வாய்ப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இயற்கை முறையில் பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் மற்றும் பொருட்களை வாங்கும் சந்தையாளர்கள் இடையேயான நட்புறவை வளர்ப்பதற்கும், உற்பத்தியாளர் - சந்தையாளர் இடையே உள்ள இடைத்தரகர்களைத் தவிர்ப்பதற்கும் இன்றைய தினம் (21.11.2023) இந்த ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியை நடத்துகிறது.
இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த இயற்கை பொருட்களின் கண்காட்சி அரங்குகளை ஒன்றிய அரசின் கூடுதல் செயலாளர் திரு. சரண்ஜித் சிங், இ.வ.ப., அவர்கள் திறந்து வைத்தார். தொடர்ந்து, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் நிகழ்ச்சிக்கு இந்நிகழ்வு குறித்து விளக்க உரையாற்றினார்.
இந்த ஒருங்கிணைப்பு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு ஓர் உறுதியான முன் முயற்சியாகும். இதன் மூலம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், இயற்கை விவசாயம் மேற்கொள்பவர்களுக்கு உள்ள சவால்களை நீக்கி, ஊரக அளவில் வேரிலிருந்து ஆதரவை வழங்கிட முன்னோடியான திட்டங்களை தயார் நிலையில் வைத்துள்ளது.
அதில் ஒன்றாக தற்போது இயற்கை பொருட்கள் உற்பத்தியாளர் - சந்தையாளர் ஒருங்கிணைப்பை நடத்தி, இயற்கை பொருட்கள் உற்பத்தியாளர் மற்றும் பொருட்களை வாங்கும் சந்தையாளர்கள் இடையே நட்புறவை ஏற்படுத்தவுள்ளது. இதன் மூலம் இருதரப்பினரும் கலந்தாலோசிக்கவும், விலைகளை நிர்ணயிக்கவும் மற்றும் வளமான வணிகத்தை நடத்துவதற்குமான பலமானப் பாதையை அமைக்கிறது.
இந்த இயற்கை பொருட்கள் உற்பத்தியாளர் - சந்தையாளர் ஒருங்கிணைப்பு, அவற்றின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தவும், பொருட்களை வாங்கவுள்ள சந்தையாளர்களிடம் நேரடி இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் மற்றும் சந்தை வாய்ப்புகளை முழுமையாகப் பெற்றிடவும் வழி வகுக்கும். மேலும் வணிகத்தில் உள்ள இடைத்தரகர்களைத் தவிர்ப்பதன் மூலம் இருதரப்பினருக்கும் இடையேயான விற்பனை பரிமாற்றத் தொகையளவு குறைவதுடன், குறைந்த விலையில் உயர்ந்த தரப் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்யவும் வழிவகைச் செய்யப்படுகிறது. இதுதவிர, இயற்கை பொருட்கள் உற்பத்தியாளர் - சந்தையாளர் இடையே வெளிப்படையான வணிகமும், நட்புறவும் உறுதிச் செய்யப்படுவதுடன் நீண்டகாலத்திற்கான பிணைப்பையும் ஏற்படுத்துகிறது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 21 உற்பத்தியாளர் மற்றும் சந்தையாளர்களிடையே 4 கோடியே 67 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் உற்பத்தியாளர்களுக்கு உறுதியான சந்தை இணைப்பை உருவாக்கப்படுவதுடன் வணிக வெற்றிக்கான நீடித்த பிணைப்பு உருவாக்கப்படும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒற்றுமைக்கான உறுதிப்பாட்டை உறுதி செய்வதுடன் இருதரப்பு வளர்ச்சிக்குமான நற்சூழலை உருவாக்கும்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நடைபெறும் இந்த உற்பத்தியாளர்-சந்தையாளர் ஒருங்கிணைப்பு, தமிழ்நாட்டு ஊரகப் பகுதி உழவர்களின் வளர்ச்சிக்கு உயர்வை அடைய வழிவகுக்கும். மேலும் இருதரப்பினருக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தி வணிக செயல்பாட்டை வளர்ப்பதன் மூலம் தமிழ்நாட்டின் வேளாண் துறையில் உயர்வான ஓர் வெற்றிப் பாதையை உருவாக்கும். அதுமட்டுமின்றி பிற மாநில சந்தையாளர்களின் வழியாக தமிழ்நாட்டின் வேளாண் துறையில் நிலையான மற்றும் உயர்வான வளர்ச்சியை கட்டமைக்கும்.
உற்பத்தியாளர் கூட்டுகள் மூலம் பெண்களின் பொருளாதார வலுவூட்டல் குறித்த ஆலோசனை (FY-2023-2024 பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்துதல்) - சென்னையில் MORD,GOI & Tnsrlm ஆல் ஏற்பாடு செய்யப்பட்டது -20.11.2023
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அத்திட்டங்களின் பயனாக இன்று சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர்.
சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில / மாவட்ட / வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகள் வாயிலாக சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புப் பொருட்களுக்கு விற்பனை வாய்ப்புகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி வருகிறது.
இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் பங்களிப்பு பெருகி வரும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புப் பொருட்களை இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக விற்பனை செய்ய தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, இணைய தளம் வாயிலாக பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாங்கிடும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் மதி சந்தை விற்பனை இணைய தளம் மற்றும் சுய உதவிக் குழுவினர், பொதுமக்கள் ஆகியோர் முற்றம் இதழிற்கான சந்தாவினை செலுத்தி, முற்றம் மாத இதழினை தங்களின் இல்லத்திற்கே நேரடியாக அஞ்சல் வாயிலாக பெற்றிடும் வகையில் உருவாக்கப் பட்டுள்ள தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு முற்றம் மாத இதழ் இணைய தளம் /கைப்பேசி செயலி ஆகியவற்றையும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 18.11.2023 அன்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை அனைத்துத் தரப்பினரும் வாங்கிடும் வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களின் மதி அனுபவ அங்காடி கட்டிடத்தினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இந்த மதி அனுபவ அங்காடியில் சுய உதவிக் குழு மகளிரால் நடத்தப்படும் “மதி கஃபே“ என்ற சிற்றுண்டி உணவகமும் அமைந்துள்ளது.
சுய உதவிக் குழுவினர், பொதுமக்கள் ஆகியோர் முற்றம் இதழிற்கான சந்தாவினை செலுத்தி, முற்றம் மாத இதழினை தங்களின் இல்லத்திற்கே நேரடியாக அஞ்சல் வாயிலாக பெற்றிடும் வகையில் உருவாக்கப் பட்டுள்ள தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு முற்றம் மாத இதழ் இணைய தளம் /கைப்பேசி செயலி ஆகியவற்றையும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 18.11.2023 அன்று துவக்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அத்திட்டங்களின் பயனாக இன்று சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர்
சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில / மாவட்ட / வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி, 07.10.2023 அன்று துவங்கியது.
இக்கண்காட்சியினை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களைப் பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர்கள், பொது மேலாளர் (பொ), இணை இயக்குநர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
2023 அக்டோபர் 07ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான சிறுதானியங்கள், செயற்கை ஆபரணங்கள், ஊறுகாய் வகைகள், வாழைநார் பொருட்கள், பாக்கு மட்டைப் பொருட்கள், சேலை வகைகள், பருத்தி மற்றும் பட்டுப் புடவைகள், பாரம்பரிய உணவுப் பொருட்கள், மண்பானைகள், கைவினைப் பொருட்கள், சிறுதானிய தின்பண்டங்கள், பனை ஓலைப் பொருட்கள், பொம்மை வகைகள், மிளகு, மூலிகைப் பொருட்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பனை ஓலைப் பொருட்கள், ஆடை வகைகள், தேங்காய் ஓடு பொம்மைகள், மரச்சிற்பங்கள், இயற்கை சோப் வகைகள், பழங்குடியினர் தயாரிப்புப் பொருட்கள், காகிதக் கூழ் பொம்மைகள், கோரைப்பாய், சிறுதானியங்கள், எண்ணெய் வகைகள், சணல் பொருட்கள், மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், குறிப்பாக நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை செய்யும் அரங்குகள் என 46 அரங்குகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழுக்கள் மற்றும் திருநங்கையர் சுய உதவிக் குழுக்களும் தங்களின் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்ய உள்ளனர். பாரம்பரிய சுவை மிகுந்த சிறுதானிய உணவுகளை உண்டு களித்திட 6 உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
நாள்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இச்சிறப்புமிகு மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சிக்கு அனைவரும் வருகை தந்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த தரமான பொருட்களை வாங்கிப் பயனடைவதோடு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவிட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிறுதானிய திருவிழாவினை தொடங்கிவைத்து, 314 பயனாளிகளுக்கு ரூ.25.26 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.8.2023) இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 31,008 பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 17 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைக்கும் விதமாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், மகளிரின் முன்னேற்றத்திற்காக, 1989 ஆம் ஆண்டு முதன்முறையாக தருமபுரி மாவட்டத்தில் துவங்கப்பட்ட மகளிர் திட்டம் இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு இத்திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில்களைத் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.
மகளிரின் முன்னேற்றத்திற்கான அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கமான தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் நகர்ப்புர குடும்பங்களின் வறுமையைப் போக்கவும், சமூக அமைப்புகள் அமைத்து, திறன் வளர்ப்பு பயிற்சி மூலமாகவும் மற்றும் வங்கி கடன் இணைப்பு மூலமாகவும் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் இயக்கம் ஆகும்.
2014 - ஆம் ஆண்டு முதல் இந்த இயக்கமானது மாநிலம் முழுவதும் உள்ள 649 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இந்த இயக்கம் மூலம் 14.5 இலட்சம் ஏழை குடும்பங்களை உள்ளடக்கிய 1.30 இலட்சம் நகர்ப்புர சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இன்று (14.08.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படும் 1808 நகர்ப்புர சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 23,424 மகளிர் சகோதரிகள் பயன் பெறும் வகையில் 100 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள், உணவுத் தர பயிற்சி பெற்று சான்றிதழ் பெறவுள்ள 182 நகர்ப்புர சாலையோர வியாபாரிகளில் 50 நபர்களுக்கு இன்றைய தினம் உணவு தரச் சான்றிதழ், திறன் பயிற்சி பெற்ற 100 இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பணி நியமன ஆணைகள், சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த சிறு தொழில் முனைவோர்களுக்கு கடனுதவிகள், நகர்ப்புர சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான முறையில் வங்கிக் கடன்கள் வழங்கிய ஆறு வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகள் மற்றும் 9 தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கி விழாப் பேருரையாற்றினார்.
Page 2 of 6, showing 9 record(s) out of 48 total